“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Default Image

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு ஹீரோவாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை சுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தை லைக்கா இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, சஞ்சனா சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்களேன்- பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.200 கோடியை தட்டிய ‘த்ரிஷ்யம் 2’.!

நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் நிறைய காமெடி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்