ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...??

It has also been reported that actor Dhanush has been paid Rs 15 crore for Jagame Tantram.

ஜகமே தந்திரம் படத்திற்காக நடிகர் தனுஷ் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த திரைப்படம் 60.கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்காக தனுஷ் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள திரைப்படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.