பிரின்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த " பிரின்ஸ்" திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில்

தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த ” பிரின்ஸ்” திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

unknown node

Prince Sk Movie [Image Source: Google]

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் படம் சிவகார்த்திகேயன் படம் என்பதால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

unknown node

Prince Prince review [Image Source: Twitter ]

அந்த வகையில், படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும்  6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான டான், டாக்டர் தமிழகத்தில் 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

unknown node

Prince [Image Source: Twitter ]

ஆனால், பிரின்ஸ் படம் மிகவும் குறைவாக 6 கோடி வசூல் மட்டுமே செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருக்கிறார்கள். வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.