உலகளவில் சுல்தான் படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..??

In the two days since its release, the movie Sultan has reportedly grossed Rs 12 crore worldwide

வெளியான இரண்டு நாட்களில் சுல்தான் திரைப்படம் உலகம் முழுவதும் 12 கோடி வசூல் செய்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திகிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான விர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் உலகம் முழுவது இந்த திரைப்படம் 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.