#LeoIndustryHit : பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் ‘லியோ’! 2 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

leo box office

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லியோ 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த இந்த ‘லியோ ‘திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.  7 ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

வரவேற்பு & வசூல் 

லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதன்படி, வெளியான முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 148 கோடி வரை வசூல் செய்திருந்தது. இதனை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இரண்டாம் நாள் வசூல் 

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் மட்டும் படம் 20 கோடிகளை இரண்டாவது நாளில் தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ சாதனை 

லியோ திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. அதில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும், கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்கிற சாதனையும் லியோ படம் படைத்துள்ளது. உலகம் முழுவதும் 148 கோடியும், கேரளாவில் 12 கோடியும் முதல் நாளில் லியோ வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்