17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்..??

It has been reported that Netflix has decided to release Jagame Tantra in about 17 languages.

ஜகமே தந்திரம் படத்தை சுமார் 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் எத்தனை கோடிக்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளது, என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது, அதாவது இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் 50 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் ஜகமே தந்திரம் படத்தை சுமார் 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.