"வாடிவாசல்" படப்பிடிப்பு எப்போது... இயக்குனர் வெற்றி மாறன் பதில்..!

It has been reported that director Vetrimaran has said that he plans to start Vadivasal after the completion of the shooting of Vadivasal.

வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு சூரியின் படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படம் தான் தொடங்க திட்டமிட்டுள்ளேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அருவா, மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அருவா படத்தில் அடுத்ததாக நடிக்க வாய்ப்பில்லை ஏனெனில் இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கி வருவதால் அடுத்த ஆண்டு அருவா படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 40 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பை 3 மாதங்களிற்குள் முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் திட்டமிட்டுள்ளாராம். இதனை தொடர்ந்து சமீபத்தில் வாடி வாசல் படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று படத்தின் இயக்குனரான வெற்றிமாறனிடம் கேட்டதற்கு சூரியின் படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படம் தான் தொடங்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.