விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு....அஜர்பைஜானில் அஜித்திற்கு பொழிந்த அன்பு மழை!!

விடாமுயற்சி : இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது. படத்தின்

Ajith Kumar

விடாமுயற்சி :இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது. படத்தின் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 1 ஆண்டுகள் ஆன நிலையில், படப்பிடிப்பு எப்போது தான் முடியும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இந்நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் அஜித்துடன் ஒன்றாக அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

unknown node

படப்பிடிப்பு முடிந்தது பற்றி லைக்கா நிறுவனம் வீடியோ ஒன்றையும் கூட வெளியீட்டு இருக்கிறது. அதே சமயம், படப்பிடிப்பு முடிந்த சமயத்தில் அங்கு இருந்த அஜித் ரசிகர்கள் பலரும் அஜித்திற்கு போட்டோ ப்ரைம் மற்றும் பல விஷயங்களை பரிசாக கொடுத்து அன்பு மழையை பொழிந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

unknown node

படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த காரணத்தால் ஏற்கனவே வெளியான தகவலை போல படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விடாமுயற்சி படத்தில் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.