விடாமுயற்சி : இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது. படத்தின் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 1 ஆண்டுகள் ஆன நிலையில், படப்பிடிப்பு எப்போது தான் முடியும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் […]