வெளியான இரண்டே தினங்களில் இத்தனை கோடி வசூல் செய்ததா 'நெஞ்சம் மறப்பதில்லை'.?

It has been reported that the nenjam marapathillai movie has collected Rs 2.5 crore in just two days of its release.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியான இரண்டே தினங்களில் ரூ.2.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.திகில் கலந்த ஹாரர் படமாக உருவான இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

தற்போது அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் தமிழக வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.