கோட் படத்தில் தோனி? உண்மையை உளறிய பிக்பாஸ் பிரபலம்!

சென்னை : விஜய் நடித்துள்ள கோட் படத்தில் தோனி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்க வாய்ப்புள்ளதாக பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு ஆக 17-ஆம் தேதி வெளியிட்டது. டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம்.
டிரைலரில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய சென்னை அணியின் வீரருமான, தோனி பற்றிய சில குறியீடுகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு ‘definitely not’ என்று தோனி பதில் கூறியிருப்பார்.
‘definitely not’ என்ற வார்த்தை அச்சிடப்பட்ட சென்னை அணியின் ஜெர்சியை விஜய் அணிந்திருப்பார். அதைப்போல, எவ்வளவு வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்ற வசனமும் தோனிக்காக வைக்கப்பட்டது போல இருந்தது. இந்த சூழலில், ஏற்கனவே, கோட் படத்தில் தோனியும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், பிக் பாஸ் பிரபலமும், சினிமா விமர்சகருமான அபிஷேக் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர் ” கோட் படத்தில் தோனி இருக்கலாம்…அதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அவரை போலப் பலர் இருப்பதைத் தாண்டி வெளியே சொல்ல முடியாத பல சர்ப்ரைஸ் படத்தில் இருக்கிறது” எனக் கூறி கோட் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அபிஷேக் ” வெங்கட் பிரபு கோட் படத்தினை முடித்த பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் செய்யவுள்ளார்” எனவும் தெரிவித்தார். இருவரும் இணையும் படம் சில காரணங்களை ட்ராப் செய்யப்படுவதாகத் தகவல்கள் பரவிக் கொண்டு இருந்த நிலையில், அபிஷேக் கூறியுள்ளது மூலம் அதற்கும் விளக்கம் கிடைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025