இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் அடுத்த படம்.! புகைப்படத்துடன் தனுஷ் பகிர்ந்த பதிவு.!

Dhanush, who is starring in Bollywood, has shared a photo saying that the final shoot of the movie Adrange is going on in Delhi.

பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் அத்ராங்கே திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருவதாக கூறி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அக்ஷய் குமார்,சாரா அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இந்த நிலையில் தற்போது தனுஷ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த படத்திலுள்ள அவரது புகைப்படத்தை பகிர்ந்து படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது தனுஷ் பகிர்ந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.

unknown node