மாஸாக வெளியாகிய தனுஷின் மாறன் பட மோஷன் போஸ்டர் ....!

The motion poster of the movie Maran starring Dhanush has been released and has been well received by the fans.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

துருவங்கள் பதினாறு எனும் வெற்றி படத்தின் இயக்குனரான கார்த்திக் நரேன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாறன். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாறன் படத்திற்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த போஸ்டர் வீடியோ,

unknown node