காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம்!

It has been reported that Dhanush's Jagame Tantra, directed by Karthik Supuraj, will be released two days before Valentine's Day.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் ஜகமே தந்திரம் எனும் திரைப்படம் காதலர் தினத்திற்கு இரு தினங்கள் முன்பாக வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் நடித்துள்ளார். மேலும் கலையரசன், தேவன் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி கடந்த வருடம் மே மாதம் வெளியிடப்பட இருந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் வெளியிட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எனவே படத்தை ஒடிடி தளங்களிலும் வெளியிட முடியவில்லை. மேலும், தியேட்டரில் தான் படத்தை வெளியிடுவோம் என ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திரந்த படக்குழுவினர், தற்போது இந்த படம் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பாகவே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.