D50 FIRST LOOK ! தனுஷ் கொடுத்த மிரட்டல் அப்டேட்!

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில், அவர் தனது 50-வது திரைப்படத்தை அவரே தான் இயக்கி அவரே தான் முக்கியமான

D50 FIRST LOOK

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில், அவர் தனது 50-வது திரைப்படத்தை அவரே தான் இயக்கி அவரே தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தை தனுஷ் இயக்குவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது.

படத்திற்கு தற்காலிகமாக D50 என்று தலைப்பும் வைக்கப்பட்டுஇருந்தது . ஆனால், இந்த திரைபடத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு தலைப்பு என்ன படத்திற்கு யார் இசையமைப்பாளர் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. படத்திற்காக தனுஷ் மொட்டை போட்டுகொண்டு இருக்கும் புகைப்படங்களும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த அப்டேட் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

ஜோ கொடுத்த பிரமாண்ட வெற்றி! ரியோவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

இந்நிலையில், அதனை தொடர்ந்து படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் திடீரென்ற ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி தற்போது அந்த அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது. அது என்ன அப்டேட் என்றால் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பற்றி தான். D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வரும் 19-ஆம் தெத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் போஸ்ட்டரை வெளியீட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 19-ஆம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர். அந்த அப்டேட்டுடன் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள். படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைக்க போகிறார் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node