மீண்டும் இயக்குனராக களமிறங்கும் தனுஷ்.! ஹீரோவாக இவர்களா.?

நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில்

நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படமும் ஓடிடியில் வெளியானது.

unknown node

இதனால் தனுஷ் ரசிகர்கள் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் நானே வருவேன். ஏனெனில் செல்வராகவன் – தனுஷ் -யுவன் கூட்டணி என்பதால். மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த நிலையில், நடிகர் தனுஷ், அடுத்ததாக ஒரு திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் டிவி ராமர் மற்றும் நடிகர் ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

இதனை ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து ரோபோ சங்கர் கூறியது ” தனுஷ் சார் இயக்கத்தில் ராமர் ஐயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..நானும் அவருடன் நடிக்கிறேன்” என கூறியுள்ளார்.

unknown node

இதற்கு முன்பு நடிகர் தனுஷ், பா.பாண்டி என்ற படத்தை நடிகர் ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி என்ற படத்தை இயக்கிருந்தார். அந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.