D-51 படத்தில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் தனுஷ் – எஸ்.ஜே.சூர்யா.!

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து, தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு

DHANUSH - SJ SURYA

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து, தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதனை தவிர இந்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையில், தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரத்தை வெளிப்படுத்தும் வகையில், தனது பேக் டு பேக் படங்கள் குறித்து விவரங்களை அறிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் இயக்கும் இரண்டாவது படமான ‘D50’ படத்தை தொடர்ந்து மூன்றாவது (D51) இயக்கத்திற்கான வேலையைத் தொடங்கியுள்ளார்.

மேலும், அந்த படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை வெளியிட்டார். தற்பொழுது, ‘D50’ படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.2017 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் D50.

இந்த படத்தை அவர் இயக்குவது மட்டுமின்றி அந்த திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சைலண்டாக நடைபெற்று வருகிறது. இந்த இனியில், தனுஷ் இரண்டாவது முறையாக இயக்கும் ‘D50’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது X தள பக்கத்தில், தனுஷின் மூன்றாவது இயக்கத்திற்கு தனுஷை பாராட்டிய ​​எஸ்.ஜே.சூர்யா, ‘டி50’ மற்றும் படத்தின் சர்வதேச வெளியீடு குறித்து புகழ்ந்து தள்ளினார். இதை வைத்து பார்க்கையில், இப்படத்தில் நடிக்கும் தனுஷ்-எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் அண்ணன் தம்பியாக நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்டுகிறது. இதனால், இந்த படத்தின் மூலம் தனுஷ் நடிகராகவும் இயக்குனராகவும் கலக்குவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

unknown node