ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்த தனுஷ்.! சூப்பர் தகவல்.!

Dhanush has announced that he will write and sing a song for the film starring GV Prakash and directed by M.Rajesh.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்திலுள்ள பாடல் ஒன்றை தனுஷ் எழுதி பாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார் .இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,சிவா மனசுல சக்தி, மிஸ்டர் லோக்கல்,பாஸ் என்கிற பாஸ்கரன், கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜ.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா அய்யர் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் படப்பிடிப்பினை தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை ஜி.வி . பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதாவது ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை எழுதி பாட உள்ளதாகவும்,அந்த பாடலுக்கு ‘டாட்டா பை பை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜிவி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே தனுஷ் அவர்கள் ஜி.வி-யின் ஜெயில் படத்திலுள்ள ஒரு பாடலை பாடி அது ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

unknown node