அந்தரத்தில் தொங்கும் தனுஷ்! வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் நடித்து வரும் 'குபேரா' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் படத்திற்கான ஆக்சன் காட்சிகள்

நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் படத்திற்கான ஆக்சன் காட்சிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தனுஷ் ஆக்சன் காட்சிக்காக ரோப் மூலம் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

unknown node

வீடியோவை பார்த்த பலரும், சற்று ஷாக் ஆகி கொஞ்சம் பார்த்து கவனமாக இருங்கள் என்று கூறி வருகிறார்கள். இந்த குபேரா படத்தினை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.