'தி கிரே மேன்' பிரீமியர் காட்சிக்கு வேட்டி சட்டையில் வந்த தனுஷ்.! வைரலாகும் வீடியோ...

நடிகர் தனுஷ் தற்போது “தி க்ரே மேன்” என்ற அதிரடியான ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக

நடிகர் தனுஷ் தற்போது “தி க்ரே மேன்” என்ற அதிரடியான ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கி புகழ்பெற்ற பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளார்கள்.

unknown node

இந்த தி க்ரே மேன் படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் நாளை வெளியாகவுள்ளதால் படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

unknown node

இதனை முன்னிட்டு, படத்திற்கான சிறப்பு பிரீமியர் காட்சி இன்று மும்பையில் நடந்தது. அங்கு தனுஷ் வேஷ்டி சட்டையில் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழையும் தாண்டி ஹாலிவுட்டிலும் தனுஷ் கலக்கி வருவதால், அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

கடந்த சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் “தி கிரே மேன்” பிரீமியர் காட்சி நடந்த போது தனுஷ் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
'தி கிரே மேன்' பிரீமியர் காட்சிக்கு வேட்டி சட்டையில் வந்த தனுஷ்.! வைரலாகும் வீடியோ...