விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொண்டுள்ளதால் பலரும் இதனை விரும்பி பார்த்து வருகிறார்கள். அவருக்கென்று தனி ஆர்மியே உருவாகிவிட்டது என்றே கூறலாம்.
unknown nodeGP Muthu [Image Source: Twitter]
இந்த நிலையில், ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த போட்டியாளருக்கு மத்தியில் மெல்ல மெல்ல சண்டைகள் வரத்தொடங்கியுள்ளது. ஆம், ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் ஜனனியால் ஆயிஷா நாமினேட் செய்யப்பட்டு வீட்டின் வெளியில் உள்ள பெட்டில் தான் தூங்க வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட்டார்.
இதையும் படியுங்களேன்-ஐ லவ் யு சார்.. என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா.? அமிதாபை அதிர வைத்த கேரளத்து முன்னணி நடிகை.!
unknown nodeGP Muthu Crying [Image Source: Twitter]
இதையடுத்து, நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ஜிபி முத்துவை ஆயிஷா, நாமினேட் செய்துள்ளார். ஏனெனில், ஜி.பி.முத்து இந்த அணி, அந்த அணி என வேறுபாடு பார்க்காமல் சகஜமாக உதவிகளை செய்து வருகிறார். இது அவருடைய சொந்த அணியினருக்கே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
unknown nodeGP Muthu Crying [Image Source: Twitter]
இதனால், ஜிபி முத்து பிற அணியினருக்கும் வேலை செய்கிறார் என அவருடைய அணியில் இருப்பவர்கள் கூறி அவரை நாமினேட் செய்துள்ளார்கள். இப்படி சொன்னதால் கடுப்பான ஜிபி முத்து வெளியில் அமர்ந்து சக ஆண் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அங்கு வந்து தனலட்சுமி நீங்க நடிக்கிறீங்க என்று கூறுகிறார். இது ஜிபிமுத்துவை பெரிதும் பாதிக்க சாப்பிடும் மேஜையில் கண்ணீர் விட்டு அழுகிறார். பிறகு அங்கிருந்த சக ஹவுஸ்மேட்ஸ் ஆறுதல் கூறுகிறார்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ஜிபி முத்து ஆர்மி தனலட்சுமி மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.
unknown node