ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

டிமாண்டி காலனி 2 படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DemonteColony2 OTT

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த படம் வந்த புதிதில் பலரும் பார்த்துவிட்டு மிரண்டனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும், உருவாக்கப்பட்டு இரண்டாவது பாகமும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

தனியாக ரிலீஸ் ஆகவில்லை, தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருந்த தங்கலான் படத்துடன் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியானது. கதை மீது நம்பிக்கை இருந்த காரணத்தால் என்னவோ படக்குழு யோசிக்காமல் அதே தேதியில் டிமாண்டி காலனி 2 படத்தினை ரிலீஸ் செய்துவிட்டது. நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது போல படமும் அமோக வரவேற்பை பெற்றது.

விமர்சன ரீதியாக பாராட்டுகளை அள்ளிய இந்த படம் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து  பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். இதனையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை திரையரங்குகளில் பர்கா தவறவிட்டவர்களும், திகில் படம் விரும்பி பார்ப்பவர்களும் வரும் டிமாண்டி காலனி 2 செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்