சமூக வலைதளங்களை கலக்கும் தர்பார் ஃபர்ஸ்ட்லுக்!படக்குழு பற்றிய விவரம் வெளியீடு!

ரஜினிகாந்தின் புதிய  படத்திற்கு தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் புதிய  படத்திற்கு தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அடுத்து மீண்டும் லைகா நிறுவனத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.இந்த படத்தின் நடிகை, நடிகர்கள் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு அடங்கிய முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்குதர்பார்என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கதாபாத்திரம் போலீஸ்  என்பது போஸ்டரில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாகநயன்தாராநடிக்க உள்ளார்.அனிருத்இசையமைக்கசந்தோஷ் சிவன்ஒளிப்பதிவு பணிகளை செய்ய உள்ளார்.

மேலும் இப்படம்2020 பொங்கலுக்குவெளியாகும் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை கண்ட ரசிகர்கள், இந்த பொங்கல் பேட்ட , அடுத்த பொங்கல் தர்பார் என கொண்டாடி வருகின்றனர்.