அடடே கியூட்!வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸான நடனமாடும் குட்டி 'மாஸ்டர்'.!

The video of a little boy dancing to the vaathi coming song in the master movie is going viral on social media.

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு குட்டி குழந்தை ஒன்று நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆட வைத்துள்ளது .அதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம்.

வாத்தியின் என்டரி பாடலான வாத்தி கம்மிங் பாடல் அந்த அளவிற்கு ஹிட் அடித்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த பாடலுக்கு நடனமாடியதும்,அவை வைரலாகியதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலை பாடி கொண்டே குட்டி குழந்தை ஒன்று கியூட்டாக நடனமாடுகிறார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.அதனுடன் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலும் அப்படியே நடனமாடுகிறாரே என்ற ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

unknown node