மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மற்றும் குழந்தைக்கு கொரோனா .!

Corona infection has been confirmed in the wife and child of the late Chiranjeevi Sharjah. Magna Raj shared this on her Instagram page.

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மற்றும் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்கு பிறகு அவரது மனைவி மேக்னா ராஜூக்கு கடந்த அக்டோபர் 22-ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது .பலரும் குட்டி சிரஞ்சீவி சார்ஜா பிறந்துள்ளார் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .இந்த நிலையில் தற்போது மேக்னா ராஜின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்னா ராஜ் அறிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில்,என் அம்மா, அப்பா, எனக்கும் மற்றும் என் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் எங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து தெரிவித்துவிட்டோம்.

சிருவின் ரசிகர்களும், எனது ரசிகர்களும் கவலை கொள்ள வேண்டாம். தற்போது நாங்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், சிகிச்சை மேற்கோண்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்.மேலும் குட்டி சிரஞ்சீவி நலமாக இருக்கிறார். ஒரு குடும்பமாக நாங்கள் இந்தப் போரில் போராடி, வெற்றியுடன் வெளியே கண்டிப்பாக வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node