காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோனா..!!

Nikki Thamboli, who played the heroine in Kansana 3, has been diagnosed with a corona infection.

காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி தம்போலிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

unknown node

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ” கொரோனா பாதிப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் . என்னுடைய தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன் விரைவில் குணமாவேன் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.