நக்கல்யா உனக்கு! ‘GOAT’ படத்தை பார்க்க நிஜ கோட்டுடன் வந்த கூல் சுரேஷ்!

GOAT படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக நிஜ ஆட்டை தூக்கிக்கொண்டு படம் பார்க்க வந்ததாக கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

GOAT cool suresh

சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘GOAT’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், யூடியூப் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் கூல் சுரேஷ் ‘GOAT’ படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஒரு படம் வெளியானால் அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளிக்க நடிகர் கூல் சுரேஷ் வந்துவிடுவார். அதுவும், சாதாரணமாக இல்லாமல் அந்த படத்திற்கு சம்பந்தமான எதாவது விஷயங்களை வேடிக்கையாக எடுத்துகொண்டு வந்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திவிடுவார்.

Read More –அப்போ துப்பாக்கி இப்போ ‘GOAT’…அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!

அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான  இந்தியன் 2 படத்தின் போது, திரையரங்கிற்கு குதிரையுடன் வந்திறங்கி சிரிப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில், அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘GOAT ‘படத்தை பார்க்க அவர் நிஜ ஆட்டுடன் வந்தது பலரையும் கவர செய்தது.

கழுத்தில் ஆட்டை சுமந்து  கொண்டு படம் பார்க்க வந்த கூல் சுரேஷ் பேசும்போது “தமிழகத்தில் மட்டும் தான் கோட் படத்தின் 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கேரளாவில் வழங்கப்பட்டுள்ளது. நான் காலையில் கேரளாவுக்கு சென்று படம் பார்த்துவிட்டு இப்போது திரும்பவும் தமிழக திரையரங்கில் படம் பார்க்க வந்திருக்கிறேன்” என நகைச்சுவையாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் படம் பார்க்க ஆட்டுடன் வந்த காரணத்தை பற்றியும் பேசினார். அது பற்றி பேசிய அவர் ” விஜய் சார் நடித்துள்ள ‘GOAT’ படத்திற்கு ஆங்கிலத்தில் ஆடு என்று அர்த்தம். எனவே, விஜய் சார் படத்தை ப்ரோமோஷன் செய்ய தான் நான் ஆட்டை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேன்” எனவும் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்