'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கருக்கு இவ்வளவு பெரிய மகன்,மகளா.? வைரலாகும் குடும்ப புகைப்படம்.!

The family photo of Baba Bhaskar, who became famous through the Cook With Comali show, is going very viral on social websites.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி.அதில் வரும் கோமாளிகளும் சரி போட்டியாளர்களும் சரி ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் .அந்த வகையில் தற்போது நடந்து வரும் சீசனில் மிகவும் பிரபலமான ஒருவர் பாபா பாஸ்கர்.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை.கோமாளிகளுடன் மட்டுமின்றி போட்டியாளர்களுடன் இவர் செய்யும் அட்ரா சிட்டி ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது . இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.மனைவி,மகன், மகளுடன் பாபா பாஸ்கர் இணைந்து எடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

unknown node