குக் வித் கோமாளி சீசன் 5 எப்படி போகுது? சோகத்துடன் ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்கள்!

Cook With Comali 5 : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிய விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

Cooku With Comali Season 5

Cook With Comali 5: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிய விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களுக்கு மத்தியில் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனையடுத்து குக் வித் கோமாளி 5 சீசன் நிகழ்ச்சியும் கடந்த 27-ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் இந்த சீசனில் நடுவராக வரவில்லை என்பதே ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் மற்றவர்கள் இருப்பதால் இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பு பார்த்தனர்.

இந்த சீசனில் சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்‌ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கிறார்கள்.கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.

(ஏப்ரல்-27) மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் இரவு 9.30 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். நிகழ்ச்சியை பார்த்த ஒருவர் ” குக் வித் கோமாளி 5 முதல் வாரம் பாத்ததுல தோணுனது, மணிமேகலை கோமாளியாகவே இருந்திருக்கலாம். ஆங்கராக மாறி ஸ்கிரீன்ல பாக்கவே முடியல.. மொத்தமா நாலஞ்சு கிளிப்ஸ்லதான் வந்தாங்க.. கவர்ந்தது கோமாளியாக வந்த செல்லம்மா சீரியல் ஹீரோயின் பொண்ணு..அப்புறம் ஸோயா” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ”குக்வித்கோமாளி5 சீசன் நேத்தைய எபிசோடு பார்த்ததில் புரிந்தது.. இதுவரை இல்லாதளவு எரிச்சலூட்டும் சீசனாக அமையும்.. குறிப்பாக பிரியங்கா பண்ணும் எரிச்சல்களை தாங்க தனி மனப்பக்குவம் வேண்டும்.. சீனியர்கோமாளி, ஜூனியர்கோமாளி,சூப்பர் சீனியர் கோமாளினு பூராவும் கடுப்பு” என கூறி இருக்கிறார். விமர்சனங்களை வைத்து பார்க்கையில், இந்த சீசன் ரொம்பவே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வரும் நாட்களிளாவது ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்வார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node
குக் வித் கோமாளி சீசன் 5 எப்படி போகுது? சோகத்துடன் ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்கள்!