சிம்புவின் பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ் மற்றும் ஷிவாங்கி நடனமாடி அசத்தியுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர் தான் பாடகி ஷிவாங்கி மற்றும் புகழ் . அவர்கள் செய்யும் லூட்டிகளும் , இருவருக்கும் இடையேயான அண்ணன்-தங்கை பாசமும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது .
இந்த நிலையில் தற்போது ஷிவாங்கி மற்றும் புகழ் இணைந்து சிம்புவின் ஈஸ்வரன் படத்திலுள்ள மாங்கல்யம் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.
unknown node