குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்.... ஜகமே தந்திரம் ரிலீஸ்.?

On the 5th, we will meet in the domain formed by Jeeva and Arulnithi, Yogi Babu's Trip and Shakti Sivan directed movie People Needed is about to be released

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

அதன் பிறகு படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் வெளியான நிலையில், இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 2 வாரங்கள் கழித்து (Netflix) இணையத்தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியா (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் ட்வீட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.