ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட கண்டிஷன்…வேதனை பட்ட சாய்ரா… சீக்ரெட்டை உடைத்த பயில்வான்!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் -சாய்ரா பானு விவாகரத்து காரணம் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

ar rahman and saira banu bayilvan ranganathan

சென்னை : இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், அவருடைய பெயர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இருவரும் கலந்து பேசி சுமுகமாக விவாகரத்து பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டபோதிலும் இவர்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் எனப் பல தகவல்களும் பரவிக் கொண்டு இருக்கிறது.

அப்படி தான், இந்த விவாகரத்து செய்தியில் நம்மளுடைய பலூனை ஊதிவிடுவோம் என்பது போல நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவர்களுடைய விவாகரத்துக்கான காரணம் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் கூறியதை வைத்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே, திரைத்துறையில் இருக்கும் பிரபலமானவர்களைத் திருமணம் செய்தால் அவர்களுடன் வெளியே சென்று நேரம் செலவு செய்வது என்பது கடினமான ஒரு விஷயம் தான்.

ஏனென்றால், அவர்கள் வெளியே வருகை தரும் விஷயம் தெரிய வந்தாலே அவர்களைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதிவிடும். எனவே, இதனைக்கருத்தில் கொண்டு பிரபலங்கள் திருமணம் முடியும் முன்னதாகவே, தங்களுடைய நிலைமை இப்படி தான் இருக்கும் எனச் சொல்லிவிடுவார்கள். அப்படி தான் இசையமைப்பாளர் ஏ.ரஹ்மானும் திருமணம் முடிப்பதற்கு முன்னதாகவே தன்னுடைய அம்மாவிடம் கண்டிஷன் போட்டியிருக்கிறார்.

அது என்ன கண்டிஷன் என்றால், தன்னை திருமணம் செய்யப்போகும் பெண் படித்த பெண்ணாக இருக்கவேண்டும். நான் சரியாகப் படிக்கவில்லை என்பதால் என்னுடைய மனைவி படித்த பெண்ணாக இருக்கவேண்டும். அதைப்போல, திருமணத்திற்குப் பிறகு வெளியே ஷாப்பிங் செய்வதற்கு அவருடன் இணைந்து பயணம் செய்ய முடியாது.

அந்த சுதந்திரம் மட்டும் என்னிடம் கிடைக்காது என்பதை ஒரு கண்டிஷனாகவே போட்டிருக்கிறார். இந்த கண்டிஷனுக்கு ஏற்ப தான் ரஹ்மானின் தாயார் அவருக்கு சாய்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் செய்துமுடித்த பிறகு ஷாப்பிங் சென்றாலும் தனியாகவே சென்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கி சாய்ரா மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்து இருக்கிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி தனியாக ஷாப்பிங் செல்வதாலும் நினைக்கும் நேரத்தில் வெளி இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நேரத்தைச் செலவிட முடியாததால் சாய்ராய் பானு வேதனைப்பட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார். இப்படியான வேதனை அதிகமான காரணத்தால் தான் சாய்ரா விவாகரத்து முடிவு எடுத்துள்ளதாகவும், அவருடைய முடிவுக்கு மதிப்பளித்து ஏ.ஆர்.ரஹ்மானும் அனுமதி அளித்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
22.11.2024 Power Cut Details
tulsi (1) (1) (1)
Goutam Adani
dhanush aishwarya
devdutt padikkal kl rahul