கர்ணன் படத்தின் பாடல்களை பாராட்டிய தளபதி- மாரி செல்வராஜ் கூறிய தகவல்..!!

Director Mari Selvaraj has said that actor Vijay watched and praised the songs of Karnan.

கர்ணன் படத்தின் பாடல்களை நடிகர் விஜய் பார்த்துவிட்டு பாராட்டியதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்துவருகிறது.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பல நடிகர்கள் என்னை பாராட்டி வருகிறார்கள். நடிகர் விஜய் பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு அருமையாக உள்ளது என்று பாராட்டினார். அதைபோல் கர்ணன் படத்தை இன்னும் அவர் பார்க்கவில்லை. ஆனால் பாடல்களை பார்த்துவிட்டு எனக்கு கால் செய்து அருமையாக உள்ளது என்று கூறியதாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

கர்ணன் படத்தின் பாடல்களை பாராட்டிய தளபதி- மாரி செல்வராஜ் கூறிய தகவல்..!!