கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின், நடிகை கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’செம்பி. இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ்

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின், நடிகை கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’செம்பி. இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் கோவை சரளா 90 வயது பட்டியாக நடித்துள்ளார்.

unknown node

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் கோவை சரளா தன் பேத்தியோடு மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வேடத்தில் நடிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியாகக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செம்பி படக்குழுவினர் ராஜ் கமல் அலுவலகத்திற்கு சென்று நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர்.

unknown node

இந்த சந்திப்பின் போது “செம்பி” திரை படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பார்த்து வெகுவாக பாராட்டினார். ட்ரெய்லரை பார்த்து ரசித்த உலகநாயகன் கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று வாழ்த்தி மகிழ்ந்தார்.

கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.!