கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் "கோப்ரா".இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கோப்ரா”.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

unknown node

வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதையும் படியுங்களேன்-சூர்யாவுக்கு தேசிய விருது…அதை பார்த்து அழுதுட்டேன்.! மன வருத்தத்துடன் பேசிய கார்த்தி..!

unknown node

இந்த நிலையில், இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  படத்தின் சிஜி வேலைகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டது.

unknown node

இதனை தொடர்ந்து தற்போது கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியீடுகிறது.