தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. விஜய், ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் துப்பாக்கி 2 படமாக இருக்க கூடும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய விருது பெற்றவரும் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் ஸ்டில்ஸை மட்டும் வெளியிட்டுள்ளார்.
unknown nodeஇதனை விஜய் ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2 தான் என்றும், அதிலும் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்ற இருப்பதை மறைமுகமாக கூறுவதாக எடுத்து கொண்டுள்ளனர். இவரது மூவர் கூட்டணியில் வெளியாகும் இந்தப் படம் பிளாக் பஸ்டர் படமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.