பிரபல நடிகருடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை அதுல்யா !!!!
- நடிகர் சூரி உடன் ஜிம்மில் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிடுள்ளார் நடிகை அதுல்யா.
நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் கோலிவுட் சினிமாவில் “காதல் கண்கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பின்பு “கதாநாயகன் ” “ஏமாலி ” “நாகேஷ் திரையரங்கம் ” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை அதுல்யா ரவி.
இந்நிலையில் இவர் தற்போது “சுட்டு பிடிக்க உத்தரவு” “நாடோடிகள் -2” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபகாலமாக வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகர் சூரி உடன் ஜிம்மில் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிடுள்ளார் நடிகை அதுல்யா.