தங்கம் கடத்தல் வழக்கு... நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!

அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Ranya Rao - Gold Smuggling

மும்பை :நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியதற்காக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அவருக்கு ரூ.102.55 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச் 3 அன்று, துபையிலிருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக 14.2 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், அவருடன் மூன்று பேர் மீதும் மொத்தம் ரூ.270 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தப்படாவிட்டால், ரன்யா ராவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என DRI எச்சரித்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.