#CinemaBreaking: சியான் 60 படத்தில் இணைந்த வாணி போஜன்..!!

It has been officially announced that actress Vani Bojan will be joining Vikram in the upcoming film chiyaan 60.

விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள சியான் 60 படத்தில் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த  படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். நடிகை சிம்ரன் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தார்கள்

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வரும் வாணி போஜன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.விரைவில் இந்த படத்திற்கான மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node
#CinemaBreaking: சியான் 60 படத்தில் இணைந்த வாணி போஜன்..!!