சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.!

Oscars 2024 - 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிக பிரிவுகளில் விருதுகளுக்கு

Oscars 2024 - Cillian murphy - Robert downey jr

Oscars 2024– 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிக பிரிவுகளில் விருதுகளுக்கு கடந்தாண்டு பெரும் வரவேற்பை பெற்ற கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒபன்ஹைமர்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

Read More –96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்…

எதிர்பார்த்ததை போலவே ஓப்பன்ஹைமர் திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது. அதிலும் முக்கிய விருதுகளான நடிகர், இயக்குனர், துணை நடிகர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என மேலும் ஒரு சில பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மர்பி வென்றுள்ளார். இவர் இளைஞர்கள் மத்தியில் பீக்கி பிளைண்டர்ஸ் எனும் வெப் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த இயக்குனர் விருதை கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார் . சிறந்த இசைக்கான விருதை லுட்விக் கோரன்சன் வென்றுள்ளார்.

Read More –குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன்

ராபர்ட் டவுனி ஜூனியருக்கு (அயர்ன் மேன் நாயகன்) சிறந்த துணை நடிகருக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ஹோய்ட் வான் ஹொய்டெமா வென்றுள்ளார். படத்தொகுப்புக்கான விருதை ஜெனிபர் லேம் வென்றுள்ளார். இதுபோக சிறந்த திரைப்படமாகவும் ஓபன்ஹைமர் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.