விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த திரைப்படம் சியான் 60. சிறந்த கேங்ஸ்டார் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது அணைத்து படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததை படக்குழு விக்ரமுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node