1 மில்லியன் மக்களின் மனம் கவர்ந்த "செல்லம்மா" பாடல்.!

The song 'Chellamma' from the movie 'Doctor' starring Sivakarthikeyan has got a record of 1 million likes.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திலுள்ள செல்லம்மா பாடல் 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.அதிலும் செல்லம்மா பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம்.அந்த அளவுக்கு ஹிட் அடித்தது .

தற்போது டாக்டர் படத்திலுள்ள செல்லம்மா பாடல் 1 மில்லியன் லைக்குகளை அள்ளி குவித்து சாதனை படைத்துள்ளது .இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #1MLikesForChellamma என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

unknown node