தல 61 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் வருகின்ற 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்குமார் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் 61 வது படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவதாகவும், அந்த திரைப்படம் முழு கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும், தந்தை மகன் உறவை வைத்து உருவாகவுள்ள திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்துடன் கூட்டணி மீண்டும் அமைப்போம் என்று நம்புகிறேன் என குறியிருந்தார். விரைவில் தல 61 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.