ராஷ்மிகா போலி வீடியோ சர்ச்சை: 3 ஆண்டுகள் சிறை.! மத்திய அரசு எச்சரிக்கை.!

rashmika video

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் அது போன்ற வீடியோவை வெளியீட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று, நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு செல்வது போல மார்பீங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது.

அது மார்பீங் செய்யப்பட்ட வீடியோ என்று கூட தெரியாமல் பலரும் ரஷ்மிகா இப்படியா உடை அணிவீர்கள்? என்பது போல கேள்வி எழுப்பினார். பிறகு அமிதாப் பச்சன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் “ராஷ்மிகா மந்தனா குறித்து பரவும் வீடியோ போலி இப்படி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பிறகு, ராஷ்மிகா மந்தனாவும் இந்த மார்பீங் வீடியோ குறித்து வருத்தத்துடன் விளக்கம் கொடுத்திருந்தார். நாகசைதன்யா, சின்னமையி, கே.கவிதா உள்ளிட்ட பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில், இனிமேல் இப்படி தவறாக மார்பீங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த இப்படி தவறான மார்பீங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில, போலியாக வீடியோவை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை  என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமில்லை, அப்படி வீடியோ வெளியீட்டால் சிறை தண்டனை மட்டுமின்றி 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்