நைஜீரியாவை சேர்ந்த முகமது அகான்பி ஓஜரா என்ற ஓலா ஜேசன் நைஜீரியாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தியா வந்த இவர் இந்தியில் தங்கல் , ராக் தேஷ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து தமிழில் சூர்யா நடித்துள்ள “சிங்கம்-3” படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார்.இந்நிலையில் டெல்லி விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த இவரிடம் தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான விமான டிக்கெட் அவர் கையில் வைத்து இருந்தது.
unknown nodeபின்னர் அவரின் பாஸ்போர்ட் பார்த்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டு முடிந்துவிட்டது என்பது தெரியவந்தது. விசா காலம் முடிந்தும் அவர் தொடர்ந்து இங்கு தங்கியுள்ளார். இதுபற்றி விசாரித்தபோது முன்னுக்குப்பின்னாக பதில்அளித்து உள்ளார். இதனால் அவரை கைது செய்து உளவுத் துறையிடம் ஒப்படைத்தனர்.