இப்போ சங்கடமா இருக்கு...தனது வைரல் புகைப்படம் குறித்து தனுஷ் என்ன கூறினார்!

ரசிகர்கள் என்னை சினிமாவில் ரசிப்பது மட்டும் போதும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தில் நடித்த பல பிரபலங்களும் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார்கள்.

அப்போது இசை வெளியீட்டுவிழாவில் தனுஷ் பல விஷயங்கள் குறித்தும் பேசினார். உதாரணமாக ராயன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடகர்கள் பாடி கொண்டிருந்தபோது அவர் கொடுத்த ரியாக்சன் வைரலாகி இருந்தது. அது குறித்தும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.

முதலில் அந்த வைரல் புகைப்படம் குறித்து அவர் பேசுகையில் ” நடிகர்கள் அடிக்கடி, ஏதாவது வேலை பார்க்கும் போது, இசையை கேட்கும் போது அனைத்தையும் மறந்து விட்டு நடிப்புக்குள் இறங்கி விடுவர். அன்று ‘ராயன்’ பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கேரக்டருக்குள் சென்று விட்டேன். இப்போ இதை பார்க்கும் போது சங்கடமா இருக்கு” என பேசினார்.

அதனைத்தொடர்ந்து, இட்லி கடை பற்றி சின்ன கதை ஒன்றையும் கூறினார். இது குறித்து பேசிய அவர் ” சின்ன வயசுல தினமும் இட்லி சாப்பிட ஆசைப்பட்டேன் ஆனால் கையில காசு இருக்காது,அதனால காலையிலே ஒரு தோட்டத்துல வேலைக்கு போவேன் 3 மணிக்கு நேரம் வேலை பார்த்தா ஒரு 2 ரூபா கிடைக்கும் அதை எடுத்துட்டு போய் ரோடு கடைல இட்லி வாங்கி சாப்பிடுவேன்.அப்போ கிடைச்ச அந்த ருசி இப்போ எவ்ளோ பெரிய ஹோட்டல்ல சாப்பிட்டாலும் கிடைக்கல” என வேதனையுடன் பேசினார்.  அதனைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் கூட்டணியில் விரைவில் “வடசென்னை -2” உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷன் பேசி அரங்கத்தை அதிர வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.