சென்னை :கோவையைச் சேர்ந்த நடிகை திவ்யபாரதி, சமூக வலைதளங்களில் மாடலாக கவனம் ஈர்த்து, தமிழ் திரையுலகில் 2021-ல் ‘பேச்சுலர்’ படத்தில் GV பிரகாஷ் ஜோடியாக அறிமுகமானவர். பின்னர் ‘மகாராஜா’ (2024), ‘கிங்ஸ்டன்’ ஆகிய படங்களில் நடித்து, தற்போது தமிழில் ‘மதில் மேல் காதல்’ மற்றும் தெலுங்கில் ‘GOAT’, வெப் சீரிஸ் ‘லிங்கம்’ ஆகியவற்றில் பணியாற்றுகிறார். இவரது தெலுங்கு அறிமுகமான ‘GOAT’ படப்பிடிப்பின் போது இயக்குநர் நரேஷ் குப்பிலி (நறேஷ் கே. லீ என்றும் அழைக்கப்படுபவர்) பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக திவ்யபாரதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்வெளியிட்ட பதிவில் இவர், படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் நடத்தை மீண்டும் மீண்டும் பெண்களை அவமதித்ததாக விவரித்துள்ளார். திவ்யபாரதியின் பதிவில், இயக்குநர் நரேஷ் அனுப்பிய என்று கூறப்படும் ஸ்க்ரீன் ஷாட்டில், திவ்யபாரதியை ‘சிலகா’ என்ற தெலுங்கு வார்த்தையால் அழைத்து, “இரண்டாம் நிலை நடிகையாக மட்டுமே பொருந்துவார்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘சிலகா’ என்றால் பறவை என்று பொருள் கொண்டாலும், தெலுங்கில் பெண்களை மரியாதை குறைவாக அழைக்கும் ஆபாச அடையாளமாக பயன்படுத்தப்படுவதாக அவர் விளக்கியுள்ளார்.
இது நகைச்சுவை அல்ல, ஆழமான பாலின பாகுபாட்டின் அறிகுறி என்று திவ்யபாரதி சாடினார். இந்த சம்பவம் ஒற்றை நிகழ்வு மட்டுமல்ல; இயக்குநர் படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தியதாகவும், அது படத்தின் படைப்பு சூழலை அழித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் சக நடிகர் சுடிகாலி சுதீர் (சுதிகாலி சுதீர்) அமைதியாக இருந்ததை திவ்யபாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இயக்குநரின் இழிவு கருத்துகளைப் பார்த்து ஹீரோ அமைதியாக இருந்தது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். இந்த கலாச்சாரத்தை ஒரு நாள் மேலும் உயிர்ப்பிக்க விட்டுவிட்டார்” என்று அவர் வருத்தம் தெரிவித்தார். தமிழ் திரையுலகில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை; அதே குழுவுடன் பலமுறை வேலை செய்தும் பிரச்சினை இல்லை என்றும், இந்த இயக்குநர் மட்டும் எல்லையை மீறியதாகவும் திவ்யபாரதி தெளிவுபடுத்தினார்.
