இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதிகட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeVarisu Moive [Image Source: Twitter]
இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. எப்போது தான் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் தமன் சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-கெத்தான லுக்கில் சிம்பு…வைரலாகும் “பத்து தல” படப்பிடிப்பு புகைப்படங்கள்.!
unknown nodeVarisu First Single From This Diwali [Image Source: Twitter]
அதன்படி, “வாரிசு” படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் தீபாவளியுடன் சேர்ந்து பாடலை ஆடி பாடி கொண்டாட உள்ளனர்.
unknown nodeகண்டிப்பாக இந்த பாடலை விஜய் தான் பாடி இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் காட்சிகள் லீக் ஆகி இருந்தது. அதில் வரும் காட்சியிலும் விஜய் தான் பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.