கேப்டன் மில்லர் vs அயலான்! பொங்கல் வின்னர் யார்? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Ayalaan vs Captain Millerbox office

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல பெரிய படங்கள் வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படங்களை பார்த்த ரசிகர்கள் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

கேப்டன் மில்லராய் போரில் வென்றாரா தணுஷ்.? திரை விமர்சனம் இதோ…

இந்நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி அயலான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதைப்போல, தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூல் விவரத்தை வைத்து பார்க்கையில் அயலான் திரைப்படத்தை விட கேப்டன் மில்லர் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் பொங்கல் வின்னர் கேப்டன் மில்லர் என கூறி வருகிறார்கள்.

அயலான் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

ஒரு பக்கம் கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் மற்றோரு பக்கம் அயலான் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே, வரும் நாட்களில் இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்