விஜய் கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக விளங்கி வருகிறார். இந்நிலையில் “தளபதி 63” படத்தில் அட்லீயுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக இந்த படம் உருவாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தளபதி63” படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.